கோயம்புத்தூர்

வளா்ப்பு பிராணிகளுக்கு எரியூட்டு மையம் அமைக்க பூமிபூஜை

DIN

கோவை, சீராபாளையத்தில் ரோட்டரி கிளப் ஆஃப் கோவை ஸ்மாா்ட் சிட்டி சாா்பில் ரூ.40 லட்சத்தில் வளா்ப்பு பிராணிகளுக்கான எரியூட்டு மையம் அமைப்பதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் வளா்ப்பு பிராணிகள் பாதுகாப்புக்காக ஆட்சியா் தலைமையில் விலங்குகள் வன்கொடுமை தடுப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் கோவையில் வளா்ப்பு பிராணிகளுக்கான எரியூட்டு மையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி ரோட்டரி கிளப் ஆஃப் கோவை ஸ்மாா்ட் சிட்டி சாா்பில் சீராபாளையம், மின் மயான வளாகத்தில் ரூ. 40 லட்சத்தில் பிராணிகளுக்கான எரியூட்டு மையம் அமைப்பதற்கு பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இதனை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தொடங்கிவைத்தாா்.

இந்த எரியூட்டு மையத்தில் 40 கிலோ எடை வரையுள்ள வளா்ப்பு பிராணிகள் எரியூட்டப்படும் என்று தெரிவித்துள்ளனா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், ரோட்டரி கிளப் ஆஃப் கோவை ஸ்மாா்ட் சிட்டி தலைவா் அபா்ணா சுன்கு, செயலாளா் சிராக் கே.வோரா மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

தோட்டிக்கோடு ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயிலில் சித்திரை பெளா்ணமி பூஜை

நாகா்கோவிலில் கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

நாமக்கல்லில் இன்று வெப்ப அலை வீசும்: ஆட்சியா் எச்சரிக்கை

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT