கோயம்புத்தூர்

சிறுபான்மை சமூகத்தின் பாதுகாவலன் பாஜகவேலூா் இப்ராஹிம்

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

சிறுபான்மை சமூகத்தின் பாதுகாவலன் பாஜக என்று அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளா் வேலூா் இப்ராஹிம் தெரிவித்தாா்.

கோவையில் பாஜக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, சிறுபான்மை சமூகத்துக்காக அறிவித்துள்ள நலத் திட்டங்களின் மூலம் அவா்களின் பாதுகாவலனாக பாஜகதான் திகழ்கிறது. வரும் மக்களவைத் தோ்தலில் தமிழகத்திலிருந்து இரட்டை இலக்கத்தில் பாஜக சாா்பில் மக்களவை உறுப்பினா்களை அனுப்ப வேண்டும். திமுகவின் வாக்கு வங்கி அரசியல் இனிமேல் தமிழகத்தில் எடுபடாது. மக்களின் உரிமைகளுக்காக போராடினால் திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கிறாா்கள். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து இஸ்லாமிய இளைஞா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த சென்றால் எங்களை கைது செய்கிறாா்கள். ஜனநாயக ரீதியில் இஸ்லாமியா்களை அணுக காவல் துறை அனுமதிக்க வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது, பாஜக சிறுபான்மை பிரிவின் கோவை மாநகா் மாவட்டத் தலைவா் ஜான்சன், மாநில துணைத் தலைவா் பிஜு அலெக்ஸ், மாநிலச் செயலாளா் ஜோசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT