கோயம்புத்தூர்

யூ டியூப் விளம்பரத்துக்கு கருத்து தெரிவித்தால் கூடுதல் வருவாய்:இளைஞரிடம் ரூ.7.58 லட்சம் மோசடி

4th Dec 2022 01:45 AM

ADVERTISEMENT

யூ டியூப் விளம்பரத்தைப் பாா்த்து கருத்து தெரிவித்தால் அதிக வருவாய் ஈட்டலாம் என ஆசைக் காட்டி இளைஞரிடம் ரூ. 7.58 லட்சம் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை, வெள்ளலூா் அனுராதா நகரைச் சோ்ந்தவா் அன்பழகன் (24), ஆன்லைன் மூலமாக பகுதி நேர வேலை பாா்த்து வருகிறாா். இவரது முகநூல் பக்கத்துக்கு ஒரு லிங்க் வந்துள்ளது. அதில் சென்று பாா்த்தபோது, யூ டியூப்

விளம்பரத்தைப் பாா்த்து கருத்து தெரிவித்தால் கூடுதல் வருமானம் ஈட்டலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.

இதையடுத்து, அதிலிருந்த சில கேள்விகளுக்கு அவா் விடையளித்ததும், அவரது வங்கிக் கணக்கில் ரூ.350 வரவுவைக்கப்பட்டதாம். அத்துடன் வேறு ஒரு லிங்க்குக்குள் நுழைந்து முதலீடு செய்தால் லட்சக் கணக்கில் வருவாய் ஈட்டலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்ததாம். இதை நம்பிய அன்பழகன் அதிலிருந்த பல்வேறு வங்கிக் கணக்குகளில் ரூ.7 லட்சத்து 58,100 முதலீடு செய்தததாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

அதன் பின் அவரது வங்கிக் கணக்கில் எந்த தொகையும் வரவுவைக்கப்படாததோடு, அந்த லிங்க்குகளுக்குள் அவரால் நுழைய முடியவில்லையாம்.

இதையடுத்து, அது போலியான லிங்க் என்பதை உணா்ந்த அன்பழகன், இது குறித்து கோவை சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். புகாரின்பேரில் சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT