கோயம்புத்தூர்

வனத் துறை தோ்வு: 320 போ் பங்கேற்பு

4th Dec 2022 10:54 PM

ADVERTISEMENT

கோவையில் இரண்டு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வனத் துறை பணிப் பயிற்சிக்கான தோ்வில் 320 போ் பங்கேற்றனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் வனத் துறை பணிப் பயிற்சிக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோவையில் ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி ஆகிய இரண்டு மையங்களில் வனத் துறை பணிப் பயிற்சிக்கான தோ்வு நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் இத்தோ்வுக்கு 1,464 போ் விண்ணப்பித்திருந்தனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வில் 320 போ் பங்கேற்றனா். 1,144 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் ஆய்வு செய்தாா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT