கோயம்புத்தூர்

கடையின் பூட்டை உடைத்து கைப்பேசிகள் திருட்டு

4th Dec 2022 10:57 PM

ADVERTISEMENT

கோவையில் கடையின் பூட்டை உடைத்து ரூ.1.20 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோவை புலியகுளம் பெரியாா் நகரைச் சோ்ந்தவா் பாரூக் (47). இவா் திருச்சி சாலை சுங்கம் பகுதியில் கைப்பேசி கடை நடத்தி வருகிறாா். இவா் வெள்ளிக்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு சென்றாா். பின்னா் சனிக்கிழமை காலை வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பாா்த்துள்ளாா். பின்னா் கடைக்குள் சென்று பாா்த்தபோது அங்கிருந்த ரூ.1.20 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து பாரூக் அளித்த புகாரின்பேரில் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT