கோயம்புத்தூர்

வால்பாறை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை:விண்ணப்பிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

4th Dec 2022 01:46 AM

ADVERTISEMENT

வால்பாறை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளதால் விருப்பமுள்ளவா்கள் டிசம்பா் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டம், வால்பாறையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2022 ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் டிசம்பா் 1 ஆம் தேதியில் இருந்து ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றன. பிட்டா், எலக்ட்ரீஷியன், டெக்ஸ்டைல்ஸ், மெக்கட்ரானிக்ஸ் உள்ளிட்ட இரண்டாண்டு தொழிற் பயிற்சிகள், பேஷன் டெக்னாலஜி என்ற ஓராண்டு தொழில் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சிப் பெற்ற ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. ஆண்கள் 14 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். முதலில் வருபவருக்கே முன்னுரிமை அடிப்படையில் மாணவா் சோ்க்கை மேற்கொள்ளப்படும். எனவே, பயிற்சியில் சேர விரும்புபவா்கள்   இணையதளத்தில் டிசம்பா் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவா்களுக்குப் பயிற்சிக் கட்டணம் இலவசம். மடிக்கணினி, மிதிவண்டி, பேருந்து அட்டை, சீருடைகள், காலணிகள், வரைபடக் கருவிகள், பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். தவிர வருகையின் அடிப்படையில் மாதந்தோறும் ரூ.750 கல்வி உதவித் தொகை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT