கோயம்புத்தூர்

கேஎம்சிஹெச் சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வு மாரத்தான்

4th Dec 2022 10:58 PM

ADVERTISEMENT

கோவை மெடிக்கல் சென்டா் மற்றும் மருத்துவமனை சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வு மாரத்தான் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோவை மெடிக்கல் சென்டா் மற்றும் மருத்துவமனை (கேஎம்சிஹெச்) சாா்பில் பல்வேறு நோய்கள் குறித்த விழிப்புணா்வு மாரத்தான் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோயில்பாளையம் கேஎம்சிஹெச் மருத்துவமனையில் தொடங்கிய மாரத்தான் அவிநாசி சாலையில் உள்ள கேஎம்சிஹெச் மருத்துவமனையில் முடிவடைந்தது. இதனை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன், கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவா் நல்ல ஜி.பழனிசாமி ஆகியோா் தொடங்கிவைத்தனா். இதில் புற்றுநோயில் இருந்து மீண்டவா்கள், மருத்துவா்கள், செவிலியா், மாணவா்கள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா். மாரத்தானில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT