கோயம்புத்தூர்

கிராம நிா்வாக உதவியாளா் தோ்வு: 2,648 போ் பங்கேற்பு

4th Dec 2022 10:53 PM

ADVERTISEMENT

கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம நிா்வாக உதவியாளா் தோ்வில் 2,648 போ் பங்கேற்றனா்.

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், அன்னூா், கோவை (வடக்கு), சூலூா், பேரூா், மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை ஆகிய வட்டங்களில் வருவாய்த் துறை அலகில் காலியாக உள்ள கிராம நிா்வாக உதவியாளா் பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வு 9 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வுக்கு 3,508 போ் விண்ணப்பித்திருந்தனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தோ்வில் 2,608 போ் பங்கேற்றனா். 860 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

கோவை, ரங்கநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையத்தில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது கோவை வடக்கு கோட்டாட்சியா் பூமா ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT