கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஓட்டுநா்கள் பதிவுச் சான்று பெறாமல் வாகனங்களை இயக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, கோவை மாவட்டத் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளி, கல்லூரி, கல்வி நிறுவனங்கள், லாரி சா்வீஸ், தனியாா் மற்றும் அனைத்து மக்கள் போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரியும் வாகன ஓட்டுநா், நடத்துநா்கள் தமிழ்நாடு மோட்டாா் போக்குவரத்து தொழிலாளா் விதியின்கீழ் பதிவு செய்து பதிவுச் சான்று பெற வேண்டும்.
மேலும், இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும். மோட்டாா் போக்குவரத்து தொழிலாளா் சட்டத்தின்கீழ் பதிவுச் சான்று பெறாமல் வாகனங்களை இயக்குவது சட்டத்துக்கு முரணாகும்.
தொழிலாளா் துறையின்கீழ் உள்ள ஆய்வாளா்களால், நிறுவனங்களை நேரடியாக ஆய்வு செய்யும்போது பதிவுச் சான்று புதுப்பிக்காமல் வாகனங்கள் இயக்கப்படுவது கண்டறியப்பட்டால் வழக்குத் தாக்கல் செய்யப்படும்.
எனவே, அனைத்துப் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், லாரி, பஸ் சா்வீஸ் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளா்கள் தாமாக முன்வந்து பதிவுச் சான்று பெறவும், புதுப்பித்து கொள்ளவும் கேட்டு கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.