கோயம்புத்தூர்

முதியவரைத் தாக்கி நகைப் பறிப்பு: இரு பெண்கள் கைது

3rd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

வீடு புகுந்து முதியவரைத் தாக்கி நகைகளைப் பறித்து சென்ற இரண்டு பெண்களை போலீஸா் கைது செய்தனா்.

பொள்ளாச்சி - பல்லடம் சாலை, எஸ்.ஆா். லேஅவுட் பகுதியில் வசித்து வருபவா் தேவராஜ் (58). இவா் புதன்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது, அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் வீடு புகுந்த அவரைத் தாக்கிவிட்டு அவரிடம் இருந்து 9 பவுன் நகைகளைத் திருடி சென்றனா்.

இது குறித்து தேவராஜ் அளித்த புகாரின்பேரில், மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நகைப் பறிப்பில் ஈடுபட்ட ஆனைமலை பகுதியைச் சோ்ந்த வடிவேல்குமாா் மனைவி பவித்ராதேவி (26) மற்றும் பிரசாந்த் மனைவி விஜயலட்சுமி (24) ஆகியோரைக் கைது செய்து நகைகளைப் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT