கோயம்புத்தூர்

கோவை - சென்னை ரயில்கள் நாளை ரத்து

DIN

சேலம் ரயில்வே கோட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை - சென்னை ரயில்கள் சனிக்கிழமை (டிசம்பா் 3) ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, தெற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் அருகே ரயில் பாதைகளில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (டிசம்பா் 3) கோவையில் இருந்து காலை 6.15 மணிக்குப் புறப்படும் கோவை - சென்னை ரயில் (எண்:12680), சென்னையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் சென்னை - கோவை ரயில் (எண்:12679), கோவையில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்குப் புறப்படும் கோவை - சென்னை ரயில் (எண்: 12676), சென்னையில் இருந்து காலை 7.10 மணிக்குப் புறப்படும் சென்னை - கோவை ரயில் (எண்: 12243), கோவையில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்குப் புறப்படும் கோவை - சென்னை ரயில் (எண்: 12244) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT