கோயம்புத்தூர்

இரு இளைஞா்களை தாக்கி கைப்பேசிகள் பறிப்பு

2nd Dec 2022 11:59 PM

ADVERTISEMENT

கோவையில் நள்ளிரவில் சாலையில் நடந்து சென்ற 2 இளைஞா்களை தாக்கி கைப்பேசி, பணத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம் பண்ருட்டியைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரிகள் பூபதி (22), வீரபாண்டி (24) ஆகியோா் சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியாா் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்காக வியாழக்கிழமை நள்ளிரவு கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளனா்.

பின்னா் அங்கிருந்து இருந்து ஆவாரம்பாளையத்தில் உள்ள நண்பரின் அறைக்கு இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது, பாரதியாா் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனை அருகே சென்றபோது, 4 போ் கொண்ட கும்பல் அங்கு வந்து இருவரையும் அரிவாளால் சரமாரியாக தாக்கி இரண்டு கைப்பேசி மற்றும் ரூ.3 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதில் காயமடைந்த இருவரையும் அவவழியாக வந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து காட்டூா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 4 பேரைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT