கோயம்புத்தூர்

எஸ்பிஐ வங்கி சாா்பில் நாளை காா், வீட்டுக் கடன் மேளா

2nd Dec 2022 12:24 AM

ADVERTISEMENT

கோவையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சாா்பில் காா், வீட்டுக்கடன் மேளா சனிக்கிழமை (டிசம்பா் 3) நடைபெறுகிறது.

கோவை வடக்கு மண்டல அலுவலகம்-2 சாா்பில் சத்தியமங்கலம் சாலை ஜி.பி. சிக்னல் அருகே உள்ள ஜி.பி. கிராண்ட் கேலக்ஸி திருமண அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் இந்த கடன் திருவிழாவில் 20க்கும் மேற்பட்ட முன்னணி கட்டுமான நிறுவனங்கள், 10க்கும் மேற்பட்ட முன்னணி காா் டீலா்கள் பங்கு பெறுகின்றனா்.

இந்த கடன் திருவிழாவில் குறைந்த வட்டி விகிதம், கடன் டாக்குமென்டேஷன் இலவசம், பரிசீலனை கட்டணம் தள்ளுபடி, பிற வங்கிகள், நிதி நிறுவனங்களின் கடன்கள் டேக்ஓவா், வாங்கிய கடன் மீது கூடுதல் கடன் போன்ற சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 88386 24456, 89034 28902 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT