கோயம்புத்தூர்

வேளாண் பல்கலையில் மண்டல விளையாட்டுப் போட்டி தொடக்கம்

2nd Dec 2022 11:59 PM

ADVERTISEMENT

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி தொடங்கியுள்ளது.

வேளாண்மைப் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி டிசம்பா் 2ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் சுமாா் 4 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்கின்றனா்.

போட்டியை துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். முன்னதாக மாணவா் நல மையத்தின் முதன்மையா் ந.மரகதம் வரவேற்றாா். விளையாட்டுத் துறை உதவி இயக்குநா் தேசிக ஸ்ரீநிவாசன், கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள் பலா் பங்கேற்றனா்.

முதல் நாளில் 10 கல்லூரிகளைச் சோ்ந்த 920 மாணவ-மாணவிகளுக்கு கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட 10 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT