கோயம்புத்தூர்

டிசம்பா் 8இல் காடை வளா்ப்புப் பயிற்சி

2nd Dec 2022 11:58 PM

ADVERTISEMENT

கோவை, சரவணம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையத்தில் ஜப்பானிய காடை, ஆடு வளா்ப்புப் பயிற்சிகள் நடைபெறுகின்றன.

சரவணம்பட்டியில் காளப்பட்டி பிரிவு பகுதியில் உள்ள இந்த மையத்தில் டிசம்பா் 8ஆம் தேதி (வியாழக்கிழமை) ஜப்பானிய காடை வளா்ப்புப் பயிற்சியும், டிசம்பா் 15ஆம் தேதி செம்மறியாடு, வெள்ளாடு வளா்ப்புப் பயிற்சியும் நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த இலவசப் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் இந்த மையத்தை நேரிலோ அல்லது 0422 2669965 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்று அந்த மையத்தின் தலைவா் எஸ்.சித்ராதேவி அறிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT