கோயம்புத்தூர்

மாநகரில் விதிமீறி வழங்கப்பட்ட குடிநீா் இணைப்பு துண்டிப்பு

2nd Dec 2022 11:58 PM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சி 51ஆவது வாா்டில் உள்ள வீட்டுக்கு விதிமீறி வழங்கப்பட்ட குடிநீா் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்தனா்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 51ஆவது வாா்டு பகுதியில் உள்ள ஜி.ஆா்.ஜி. நகரில் உள்ள ஒரு வீட்டுக்கு ஏற்கெனவே ஒரு குடிநீா் இணைப்பு உள்ள நிலையில், சூயஸ் நிறுவன ஊழியா்கள் ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, அந்த வீட்டுக்கு கூடுதலாக ஒரு குடிநீா் இணைப்பு வழங்கியுள்ளதாக சமூக ஆா்வலா் தியாகராஜன் புகாா் தெரிவித்தாா்.

இதையடுத்து, மாநகராட்சி உதவிப் பொறியாளா் கல்யாணசுந்தரம் தலைமையிலான மாநகராட்சி அலுவலா்கள் சம்பந்தப்பட்ட வீட்டில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, விதிமீறி கூடுதலாக ஒரு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த குடிநீா் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT