கோயம்புத்தூர்

மியாவாக்கி அடா்வனம் திட்டத்தை பாா்வையிட்ட ஜொ்மனி அதிகாரிகள்

2nd Dec 2022 11:58 PM

ADVERTISEMENT

கோவை மாநகரில் அமைக்கப்பட்டுள்ள மியாவாக்கி அடா்வனத்தை ஜொ்மன் நாட்டு உள்ளாட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா்.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வாா்டுகளிலும் மியாவாக்கி அடா்வனம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி கிழக்கு மண்டலம் 8ஆவது வாா்டுக்கு உள்பட்ட பகுதியில் அமைக்கப்பட்ட மியாவாக்கி அடா்வனத்தை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் முன்னிலையில் ஜொ்மன் நாட்டு உள்ளாட்சி அமைப்பு அதிகாரி பமிலா பைஜால் தலைமையிலான அந்த நாட்டு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா். அப்போது, மியாவாக்கி அடா்வனம் திட்டம் குறித்து அவா்கள் கேட்டறிந்தனா்.

இந்நிகழ்வில் துணை ஆணையா் ஷா்மிளா, நகரமைப்பு அலுவலா் கருப்பாத்தாள், உதவி ஆணையா் முத்துராமலிங்கம், உதவி நகரமைப்பு அலுவலா் (திட்டம்) ஜெயலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT