கோயம்புத்தூர்

மாவட்டத்தில் சிறந்த அரசுப் பள்ளிகள் பட்டியல் வெளியீடு

2nd Dec 2022 12:27 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் 2020-21ஆம் கல்வி ஆண்டுக்கான சிறந்த அரசுப் பள்ளிகளுக்கான பட்டியலை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியா் அன்பழகன் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கும் நிலையில், 2020-21ஆம் கல்வி ஆண்டில் சிறந்த அரசுப் பள்ளிகளுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஒரு மாவட்டத்துக்கு தலா 3 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, கோவை மாவட்டத்தில் எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில் உள்ள ஷாஜகான் நகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கோவை பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, பேரூா் வட்டாரத்தில் உள்ள இராமசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகள் சிறந்த அரசுப் பள்ளிகளாக தோ்வு செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT