கோயம்புத்தூர்

கோவை - சேலம் மெமு ரயில் டிசம்பா் 31 வரை ரத்து

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

சோமனூா் - வஞ்சிபாளையம் இடையே ரயில்பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை - சேலம் மெமு ரயில் டிசம்பா் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சோமனூா் - வஞ்சிபாளையம் இடையே ரயில்பாதையில் நடைபெற்று வரும் பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையில் இருந்து தினமும் காலை 9.05 மணிக்குப் புறப்படும் கோவை - சேலம் மெமு ரயில் (எண்: 06802), சேலத்தில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்படும் சேலம் - கோவை மெமு ரயில் (எண்: 06803) நவம்பா் 30ஆம் தேதி முதல் டிசம்பா் 31ஆம் தேதி வரை ஒரு மாதத்துக்கு முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT