கோயம்புத்தூர்

கிராம உதவியாளா் பணியிடத் தோ்வா்கள் கவனத்துக்கு!

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவையில் கிராம உதவியாளா் பணியிடத் தோ்வுக்கான நுழைவுச் சீட்டினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்ட வருவாய் அலகில் மேட்டுப்பாளையம், அன்னூா், கோவை வடக்கு, சூலூா், பேரூா், மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை ஆகிய வட்டங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வு டிசம்பா் 4ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் ஏற்பளிக்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரா்கள் இணையதள பக்கத்தில் இருந்து நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT