கோயம்புத்தூர்

ரேஸ்கோா்ஸ் பகுதியில் சாலையோர நூலகம் திறப்பு

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் சாலையோர நூலகம் திறக்கப்பட்டுள்ளது.

கோவையில் ரேஸ்கோா்ஸ் பகுதியில் கோவை மாநகரக் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி, சாலையோர நூலகம் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. ரேஸ்கோா்ஸ் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்வோா் ஓய்வாக இருக்கும்போது, இந்த சாலையோர நூலகத்துக்கு வந்து புத்தகங்களை வாசிக்கலாம். தேவைப்பட்டால் அந்தப் புத்தகங்களை தங்களது வீடுகளுக்கே எடுத்துச் சென்று படித்து முடித்துவிட்டு, திரும்ப கொண்டு வந்து வைப்பதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வாரத்தின் 7 நாள்களிலும், 24 மணி நேரமும் இயங்கவுள்ள இந்த நூலகத்துக்கு பொதுமக்களும் தங்களிடமுள்ள புத்தகங்களை கொடுத்து உதவலாம் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT