கோயம்புத்தூர்

வெள்ளிங்கிரி உழவன் உற்பத்தியாளா் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.17.70 கோடி

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஈஷாவின் வழிகாட்டுதலில் செயல்படும் வெள்ளிங்கிரி உழவன் உற்பத்தியாளா் நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் ரூ.17.70 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

இது தொடா்பாக ஈஷா அறக்கட்டளை கூறியிருப்பதாவது:

ஈஷாவின் வழிகாட்டுதலில் செயல்படும் கோவை வெள்ளிங்கிரி உழவன் உற்பத்தியாளா் நிறுவனம் 2021-2022ஆம் நிதி ஆண்டில் மொத்த வருவாயாக ரூ.17.70 கோடி ஈட்டியுள்ளது. இது கடந்த நிதி ஆண்டை விட ரூ.3.70 கோடி அதிகமாகும்.

சத்குரு ஜக்கி வாசுதேவின் ஆலோசனையின்படி, கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் பகுதியில் கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் 1,063 விவசாயிகள் உறுப்பினா்களாக உள்ளனா். இவா்களில் 404 போ் பெண்கள்.

ADVERTISEMENT

இந்நிறுவனத்தின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் ஈஷா யோக மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான உறுப்பினா்கள் பங்கேற்றனா். இந்த கூட்டத்தில் வரவு - செலவு விவரங்கள் வெளியிடப்பட்டன.

அதன்படி, ஒட்டுமொத்தமாக 5,859 ஏக்கரில் விவசாயம் செய்து வரும் இந்த நிறுவனம் அதிகபட்சமாக தேங்காய் விற்பனையின் மூலம் ரூ.14.92 கோடியும், உர விற்பனை மூலம் ரூ.1.26 கோடியும் வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டில் 5,621 டன் தேங்காய், 7,066 டன் தேங்காய் மட்டை, 252 டன் காய்கறிகள், 2.70 டன் தேங்காய் எண்ணெய் ஆகியவை விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் தலைவா் குமாா், இயக்குநா்கள் வேலுமணி, நாகரத்தினம், கிட்டுசாமி, ஈஷா தன்னாா்வலா்கள் வெங்கட் ராசா, அருணகிரி உள்ளிட்டோா் உரையாற்றினா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT