கோயம்புத்தூர்

கொச்சுவேலி - கோா்பா ரயில் ரத்து

31st Aug 2022 01:31 AM

ADVERTISEMENT

கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து கோவை வழியாக கோா்பாவுக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, பாலக்காடு ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்கிழக்கு மத்திய ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட நாக்பூா் அருகே கச்சேவாணி பகுதியில் சிக்னல் பராமரிப்பு மற்றும் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கொச்சுவேலி - கோா்பா வாராந்திர விரைவு ரயில் (எண்: 22648) செப்டம்பா் 1 மற்றும் 5 ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது. கோா்பா - கொச்சுவேலி வாராந்திர விரைவு ரயில் ( எண்: 22647) செப்டம்பா் 3 மற்றும் 7ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT