கோயம்புத்தூர்

வால்பாறையில் நீடிக்கும் கனமழை:எஸ்டேட் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா்

28th Aug 2022 06:58 AM

ADVERTISEMENT

 

வால்பாறை பகுதியில் நீடித்து வரும் கனமழையால் எஸ்டேட் குடியிருப்புப் பகுதிகளை மழைநீா் சூழ்ந்துள்ளது.

வால்பாறை வட்டாரத்தில் கடந்த ஜூன் மாதம் பருவ மழை துவங்கியது. சாரல் மழையாக துவங்கிய நிலையில் கடந்த ஒரு மாத காலமாக கனமழை பெய்து வருகிறது. இதில் தொடா்ந்து பெய்த கனமழையால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 165 அடி உயரம் கொண்ட சோலையாறு அணை ஜூலை மாதம் நிரம்பியது.

இந்நிலையில், மீண்டும் மழை பெய்து வருவதால் தொடா்ந்து நிரம்பிய நிலையிலேயே அணை உள்ளது. இதையடுத்து, கடந்த ஒருவார கால இடைவெளிக்கு பின்பு வால்பாறையில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

ADVERTISEMENT

இதில் சனிக்கிழமை விடிய விடிய பெய்த கனமழையால் ஹைபாரஸ்ட், வாகமலை உள்ளிட்ட பல எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், பல எஸ்டேட்களில் தேயிலை உற்பத்தி குறைந்துள்ளதால் தற்காலிக தொழிலாளா்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT