கோயம்புத்தூர்

கோவையில் 'தாய்மையின் தோழி' மற்றும் 'ஆரோக்கியத்திற்கான பாதை' புத்தகங்களை வெளியிட்ட முதல்வர்

27th Aug 2022 01:18 PM

ADVERTISEMENT

கோவை: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கோவை பந்தய சாலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் மருத்துவர்கள் எழுதிய 'தாய்மையின் தோழி' மற்றும் 'ஆரோக்கியத்திற்கான பாதை'  என்ற புத்தகங்களை வெளியிட்டார்.

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், பந்தய சாலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் கர்ப்ப கால முதல், குழந்தைகளை பராமரிப்பது வரையான பல்வேறு உள்ளடக்கங்களை கொண்ட 'தாய்மையின் தோழி' புத்தகத்தை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து 'ஆரோக்கியத்திற்கான பாதை' என்ற புத்தகத்தையும் வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து 'தாய்மையின் தோழி' புத்தகத்தை எழுதிய மருத்துவர் விஜய ஹரிணி பாலமுருகன் மற்றும் மருத்துவர் சுரேகா குமார் ஆகியோர் புத்தகத்தின் நோக்கம் குறித்து முதல்வரிடம் விளக்கினர்.

இதையடுத்து 'ஆரோக்கியத்திற்கான பாதை' புத்தகத்தின் எழுத்தாளர் மருத்துவர் பாலமுருகன் உடல் பருமன் மருத்துவத்துறையை குறித்தும் ஆரோக்கியத்திற்கான பாதை புத்தகத்தின் நோக்கம் குறித்தும் முதல்வரிடம் தெரிவித்தார். 

ADVERTISEMENT

பின்னர் இரண்டு புத்தகங்களையும் பெற்றுக் கொண்ட முதல்வர் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த புத்தக வெளியீட்டு நிகழ்வின்போது மருத்துவர்கள் கே.எஸ்.மகேஸ்வரி, எஸ்.பாலமுருகன், வி.விஜயஹரிணி, கே.சுரேகா மற்றும் அன்னை நர்சிங் ஹோம் மருத்துவமனையின் இயக்குனர் செந்தில் நாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT