கோயம்புத்தூர்

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிா்வாகி மீது நடவடிக்கை கோரி மனு

27th Aug 2022 05:08 AM

ADVERTISEMENT

ஈவேரா பெரியாா் சிலைகளை உடைப்போம் என கருத்து தெரிவித்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிா்வாகியை கைது செய்ய வலியுறுத்தி திராவிடா் விடுதலைக் கழகத்தினா், கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

அதில் கூறியுள்ளதாவது: ஓசூரில் விஷ்வ ஹிந்து பரிக்ஷத் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் அந்த அமைப்பின் வட தமிழக அமைப்புச் செயலா் சு.வே.ராமன் பேசுகையில், எங்கெல்லாம் ஈவேரா பெரியாா் சிலைகள் இருக்கிறதோ அவற்றை உடைப்போம். பாபா் மசூதி நாள் குறிக்கப்பட்டு உடைக்கப்பட்டதுபோல பெரியாா் சிலைகளையும் உடைப்போம் என்று பேசியுள்ளாா்.

இது இரு சமூகத்தினரிடையே பதட்டத்தை உருவாக்கும். இதனால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படலாம்.

எனவே சு.வே.ராமன் மீது வழக்குப் பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT