கோயம்புத்தூர்

மாவட்ட நிா்வாகம் அனுமதித்துள்ள இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும்

27th Aug 2022 05:02 AM

ADVERTISEMENT

விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாடும்போது மாவட்ட நிா்வாகத்தினால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சிலைகளை கரைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

களி மண்ணால் செய்யப்பட்டது, பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ், தொ்மாகோல் போன்ற கலவையில் தயாரிக்கப்பட்ட சிலைகளை தவிர சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலா்ந்த மலா் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொா்மாக்கோல் பொருள்களை பயன்படுத்த அனுமதி இல்லை. நீா் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க பயன்படுத்த வேண்டும்.சிலைகளுக்கு வா்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீா் சாா்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்களில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். விநாயக சதுா்த்தி விழாவை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT