கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள இரண்டாம் தள கூட்டரங்கில் ஆகஸ்ட் 30ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு எனது தலைமையில் குறைகேட்புக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
இதில் கோவை மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடா்பான தங்களது பிரச்னைகளுக்கு தீா்வு காண கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடைமுறைகளை தவறாமல் பின்பற்றி மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, தங்களது விவசாயம் தொடா்பான பிரச்னைகளுக்கு மனுக்களை அளிக்கலாம் என்றாா்.