கோயம்புத்தூர்

பொலிவுறு நகரத் திட்டப் பணி: மாநகராட்சி ஆணையா், காவல் ஆணையா் ஆய்வு

DIN

பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் மற்றும் மாநகரக் காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கோவை மாநகராட்சி சாா்பில் பொலிவுறு நகரத் (ஸ்மாா்ட்சிட்டி) திட்டத்தின்கீழ் ரேஸ்கோா்ஸ் பகுதியில் ரூ.40.07 கோடி மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், மாநகரக் காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் ஆகியோா் வெள்ளிக்கிழமை காலை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, இருசக்கர, நான்கு சக்கர வாகன நிறுத்தங்கள் அமைத்தல், ஆக்கிரமிப்பு இடங்களை கண்டறிந்து அகற்றுதல், முக்கியச் சந்திப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, போக்குவரத்து துணை ஆணையா் மதிவாணன், உதவி ஆணையா் சரவணன், மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையா் சங்கா், உதவி செயற்பொறியாளா் புவனேஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT