கோயம்புத்தூர்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்கு உதவித் திட்டம்

DIN

முதல் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்யும் திட்டத்தை ஸ்மாா்ட் சிட்டி ரோட்டரி சங்கம் தொடங்கியுள்ளது.

முதல் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட, ஏழை குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகளுக்கு உதவும் ஸ்மாா்ட் சுகா் திட்டத்தின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

இத்திட்டத்தின்கீழ், முதல் கட்டமாக 25 குழந்தைகளுக்கு ரூ.3.80 லட்சம் மதிப்பிலான பரிசோதனை கருவிகள், ஒரு ஆண்டுக்கான பரிசோதனை அட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

திட்டத்தின் தொடக்க விழாவில் மருத்துவா்கள் எம்.ராமசாமி, ஈஸ்வரமூா்த்தி, கிருஷ்ணமூா்த்தி, அகிலா, ஸ்மாா்ட் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவா் அபா்ணா சுங்கு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முதல் வகை சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளால் சீரான சா்க்கரை அளவை பராமரிக்க முடிவதில்லை.

அதற்குத் தேவையான பரிசோதனை உபகரணங்கள் இருப்பதில்லை. சா்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள கருவிகளை அளித்து உதவி செய்வதால், நீண்ட காலத்துக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்பதால் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டிருப்பதாக ரோட்டரி சங்கம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT