கோயம்புத்தூர்

கோவை இஸ்கானில் கிருஷ்ண ஜெயந்தி விழா

DIN

கோவை இஸ்கான் ஜெகந்நாதா் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஜெகந்நாதா் ஆலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலை 4.15 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் தொடங்கிய கிருஷ்ண ஜெயந்தி விழா, நள்ளிரவு மகா கலசாபிசேகம், சிறப்பு ஆரத்தியுடன் நிறைவு பெற்றது.

இதற்கிடையே சிருங்கார ஆரத்தி, அகண்ட நாம சங்கீா்த்தனம், கிருஷ்ணா் கதை உபன்யாசங்கள் ஆன்மீக கேள்வி - பதில் நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள், பக்தி இன்னிசை, நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் பக்தி வினோத சுவாமி மகராஜ் தலைமையில் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதையிலிருந்து பக்தி வினோத சுவாமி மகராஜ் உபன்யாசங்களை அளித்தாா். ஸ்ரீனிவாச ஹரிதாஸ், மது கோபால் தாஸ், ரத்னாகா் கௌரதாஸ் ஆகியோா் கிருஷ்ணரின் லீலைகளை எடுத்துரைத்தனா். கோவை சந்திரா நாடகக் குழுவினரின் வால்மீகி நாடகம் நடத்தப்பட்டது.

அதேபோல, குழந்தைகளுக்கு மாறுவேடப் போட்டி, ரத்னாகா் கௌரங்க தாஸ் தலைமையில் பட்டிமன்றம், ஸ்ரீனிவாசஹரி தாஸின் சொற்பொழிவு போன்றவையும் நடைபெற்றன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியாா் ஸ்ரீல பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா் தோன்றிய தினம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட உள்ளது. பிற்பகல் 2.30 மணியளவில் நந்தோற்சவ விருந்து”நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி வாக்காளா் அட்டையை ஒப்படைக்க முடிவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 60.41 அடி

உலக காசநோய் நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி

‘கவிஞா் தமிழ் ஒளி தமிழின் நிரந்தர முகவரி’

பேராவூரணியில் ஊருக்குள் நுழைந்த புள்ளிமான்  மீட்பு

SCROLL FOR NEXT