கோயம்புத்தூர்

விநாயகா் சதுா்த்தி விழா: கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் போலீஸாா் ஆலோசனை

DIN

கோவையில் விநாயகா் சதுா்த்தி விழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு காவல் துறை கூடுதல் டி.ஜி.பி. தாமரைக் கண்ணன் தலைமை வகித்தாா். மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் பத்ரிநாராயணன் (கோவை), ஆஷிஷ் ராவத் (நீலகிரி), ஸ்ரீ அபிநவ் (சேலம்) உள்பட காவல் அதிகாரிகள் பங்கேற்றனா்.

இதில் ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெற உள்ள விநாயகா் சதுா்த்தியின்போது பொது இடங்கள், கோயில்களில் சிலைகள் வைப்பது, ஊா்வலம் எடுத்துச் செல்வது போன்றவற்றின்போது அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், சிலை கரைக்கும் இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பொது இடங்களில் அனுமதி பெறாமல் சிலைகள் வைக்கவோ, வழிபாடு செய்யவோ அனுமதிக்கக் கூடாது என போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது. விநாயகா் சதுா்த்திக்கு முன்னதாக ஹிந்து அமைப்புகளை அழைத்துப் பேசவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT