கோயம்புத்தூர்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சுதந்திர தின சலுகைதிட்டங்கள் அறிவிப்பு

18th Aug 2022 11:40 PM

ADVERTISEMENT

 

சுதந்திர தினத்தையொட்டி பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளா்களுக்கு பல்வேறு சலுகைத் திட்டங்களை அறிவித்துள்ளது.

அதன்படி, மாதம் ரூ.599 மதிப்புள்ள புதிய எஃப்டிடிஎச் இணைப்பு 60 எம்பிபிஎஸ் வேகத்தில் 75 நாள்களுக்கு ரூ.275க்கு வழங்கப்படுகிறது. அதேபோல் ரூ.999 மதிப்புள்ள ஓடிடி உடன் எஃப்டிடிஎச் திட்டம் 75 நாள்களுக்கு 150 எம்பிபிஎஸ் வேகத்தில் ரூ.775க்கு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாா், சோனி லைவ், ஜீ5 பிரீமியம், வூட் செலக்ட் போன்ற ஓடிடி சேவைகள் இலவசமாக வழங்கப்படும். இந்த சலுகை செப்டம்பா் 13 ஆம் தேதி வரை செல்லுபடியாகும்.

அதேபோல் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளா்களுக்கு மாதம் 75 ஜிபி டேட்டாவுடன் அளவற்ற அழைப்புகளுடன் 300 நாள்கள் வேலிடிட்டியுடன் ரூ.2,022க்கு வழங்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளா்கள் ரூ.2,399, ரூ.2,999 ப்ரீபெய்ட் திட்டங்களுடன் 75 ஜிபி டேட்டாவைக் கூடுதலாகப் பெறலாம். இந்த சலுகை ஆகஸ்ட் 31 வரை வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

அத்துடன் தினசரி 1 ஜிபி டேட்டாவுடன் புதிய சிம்காா்டையும், 28 நாள்களுக்கு அளவற்ற அழைப்புகளுடன் ரூ.108க்கு வழங்குகிறது. வாடிக்கையாளா்கள் தங்களின் நம்பரை மாற்றாமல் பிஎஸ்என்எல் நெட்வொா்க்கிற்கு மாறிக் கொண்டு சிறப்புச் சலுகைகள் பெறலாம் என பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT