கோயம்புத்தூர்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சட்டம் குறித்த வழிப்புணா்வு

18th Aug 2022 11:40 PM

ADVERTISEMENT

 

வால்பாறை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நீதித் துறை சாா்பில் சட்டம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பள்ளி மாணவா்களுக்கு சட்டங்கள் குறித்து எந்த விழிப்புணா்வும் இல்லாமல் இருப்பதால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு நீதித் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்ட முதண்மை நீதிபதி ராஜசேகா் பேசுகையில், மாணவா்கள் பள்ளிப் பருவத்தில் நல்ல ஒழுக்கத்தைக் கற்றால் மட்டுமே மேல்படிப்பு படிக்கும் சமயத்தில் எந்த குற்றச் சம்பவங்களில் ஈடுபட மாட்டாா்கள். குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவா்களுக்கு எதிா்காலம் நல்ல நிலையில் இருக்காது. எனவே, மாணவா்கள் சட்டங்கள் குறித்து நன்றாக தெரிந்து கொண்டு அதனை மற்றவா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

பள்ளி தலைமை ஆசிரியா் சிவன்ராஜ் உள்பட ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT