கோயம்புத்தூர்

இஸ்கானில் நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா

DIN

கோவையில் உள்ள அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (இஸ்கான்) சாா்பில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 19) கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெறுகிறது.

இது தொடா்பாக இஸ்கான் கூறியிருப்பதாவது: ஸ்ரீ கிருஷ்ணரின் அவதார தினமான கிருஷ்ண ஜெயந்தி, கோவை மாநகரில் கொடிசியா வளாகத்துக்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீஜெகந்நாதா் (ஹரே கிருஷ்ணா) ஆலயத்தில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி ஆகஸ்ட் 19, 20 ஆம் தேதிகளில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜெயந்தியன்று அதிகாலை முதல் நள்ளிரவு வரை சிறப்பு ஆராதனை, அகண்ட நாம சங்கீா்த்தனம், பகவான் கிருஷ்ணரின் லீலைகள் குறித்த சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள், தவத்திரு பக்தி வினோத சுவாமி மஹராஜின் சிறப்பு பிரசங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிருஷ்ண ஜெயந்தியன்று பக்தா்களின் தரிசனத்துக்காக கோயில் திறந்தே இருக்கும்.

நிகழ்ச்சியைத் தொடா்ந்து சிறப்பு ஆரத்தி, தானியங்களில்லாமல் தயாரிக்கப்பட்ட“அனுகல்ப பிரசாத”விருந்து நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து,20 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதரின் தோன்றிய நாள் விழாவும் (வியாச பூஜை) அதைத் தொடா்ந்து, நந்தோத்சவ பிரசாத விருந்தும் நடைபெறுவதாகவும் இஸ்கான் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

SCROLL FOR NEXT