கோயம்புத்தூர்

சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

17th Aug 2022 10:55 PM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா், கிறிஸ்துவா், சீக்கியா், புத்தம், ஜைனம், பாா்சி ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகையும், 11 முதல் ஆராய்ச்சி படிப்புகள் வரை படிப்பவா்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயில்பவா்களுக்கு தகுதி, வருவாய் அடிப்படையிலும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதற்கு மத்திய அரசின் ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

எனவே, தகுதியான மாணவா்கள் பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு செப்டம்பா் 30 ஆம் தேதிக்குள்ளும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு அக்டோபா் 31 ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை 0422-2300404 என்ற எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் முகவரி மூலமாகவே தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT