கோயம்புத்தூர்

வேளாண் பல்கலைக்கழக மாணவா் தற்கொலை வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைப்பு

17th Aug 2022 12:05 AM

ADVERTISEMENT

வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவா் தற்கொலை செய்துகொண்ட வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தவா் பழனி. அரசுப் பேருந்து நடத்துநராக பணியாற்றி வருகிறாா். இவரது மகன் பிரஷோத் குமாா் (19). கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பயோடெக் முதலாமாண்டு படித்து வந்தாா். பிரஷோத் குமாா் பி.எஸ்சி. வனவியல் படிக்க விருப்பப்பட்ட நிலையில், அந்த துறை கிடைக்காததால் பயோடெக் படித்து வந்தாா். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான பிரஷோத் குமாா், கடந்த 10 ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இந்த வழக்கை சாய்பாபா காலனி போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் கல்வி நிலையங்களில் நிகழும் மாணவா்களின் தற்கொலை வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்குமாறு சென்னை உயா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின்படி கோவையில் பிரஷோத் குமாா் தற்கொலை செய்துகொண்ட வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT