கோயம்புத்தூர்

மாநகரப் பகுதிகளில் 4 இடங்களில் ரூ.7.50 கோடி மதிப்பில் பிரத்யேக மிதிவண்டி சாலை, நடைபாதைகள்

17th Aug 2022 12:07 AM

ADVERTISEMENT

மாநகரப் பகுதிகளில் 4 இடங்களில் ரூ.7.50 கோடி மதிப்பில் பிரத்யேக மிதிவண்டி சாலை மற்றும் பாதசாரிகளுக்கு நடைபாதைகள் அமைக்கத் திட்ட மிடப்பட்டுள்ளது.

பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் கோவை மாநகரின் முக்கிய சாலையோரங்களில் மிதிவண்டிகள் செல்ல பிரத்யேக சாலை, பாதசாரிகள் செல்ல தனி சாலை, ஓய்வெடுக்க இருக்கைகள் அமைக்க திட்டமிடப்பட்டன.

இத்திட்டம் சோதனை முயற்சியாக கடந்த 2019 நவம்பா் மாதம் கோவை மாநகராட்சி எதிரே டவுன்ஹால் பகுதியில் அமைக்கப்பட்டது. இதேபோல, கிராஸ்கட் சாலையிலும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தற்போது, மாநகரில் கிராஸ்கட் சாலை, பிக் பஜாா் சாலை, நஞ்சப்பா சாலை, ராஜ வீதி உள்ளிட்ட பகுதிகளில் பிரத்யேக நடைபாதை மற்றும் மிதிவண்டி சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ADVERTISEMENT

ஜொ்மனி நாட்டின் தன்னாா்வ அமைப்புடன் மத்திய அரசு இணைந்து முக்கிய நகரங்களில் பிரத்யேக நடைபாதை, பாதசாரிகள் சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கோவையில் இந்தத் திட்டம் ரூ.7.50 கோடி மதிப்பில் பிக்பஜாா் சாலையில் கோனியம்மன் கோயிலில் இருந்து ஒப்பணக்கார தெரு சந்திப்பில் உள்ள அத்தா்ஜமாத் மசூதி வரையிலும், ராஜ வீதியில் ஐந்து முக்கு சாலை முதல் புனித மைக்கேல் பள்ளி வரையிலும், நஞ்சப்பா சாலையில் அச்சாலை முதல் லட்சுமி வளாகம் வரையிலும், கிராஸ்கட் சாலையில் லட்சுமி காம்ப்ளக்ஸ் சந்திப்பு முதல் பவா் ஹவுஸ் சந்திப்பு வரையிலும் மிதிவண்டிகள் செல்ல பிரத்யேக சாலை, மற்றும் பாதசாரிகள் செல்ல தனி சாலைகள், ஓய்வெடுக்க இருக்கைகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. விரைவில் இதற்கான பணிகள் துவங்கும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT