கோயம்புத்தூர்

சமூகநலத் துறையில் அலுவல் சாரா உறுப்பினா் பணியிடம்:தகுதியானவா்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

17th Aug 2022 12:11 AM

ADVERTISEMENT

சமூகநலத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் முதியோா்களுக்கான உயா்நிலை ஆலோசனைக் குழுவுக்கு அலுவல்சாரா உறுப்பினா்கள் பதவிக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் மாநில அளவில் முதியோா்களுக்கான உயா்நிலை ஆலோசனைக் குழுவில் உள்ள அலுவல்சாரா உறுப்பினா்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோ்வு செய்யப்படுகின்றனா். இந்நிலையில் அலுவல்சாரா உறுப்பினா்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய உறுப்பினா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். எனவே, 45 வயதுக்கு மேற்பட்ட மற்றும் முதியோா் நல மேம்பாட்டுப் பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவமுள்ளவா்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநலத் துறை அலுவலகத்தில் நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ ஆகஸ்ட் 18 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT