கோயம்புத்தூர்

தொழுநோய் கண்டறியும் சிறப்பு முகாம் தொடக்கம்:செப்டம்பா் 3 வரை நடக்கிறது

17th Aug 2022 12:09 AM

ADVERTISEMENT

கோவையில் தொழுநோய் பாதிப்பை கண்டறியும் சிறப்பு முகாம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி செப்டம்பா் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இது தொடா்பாக துணை இயக்குநா் (தொழுநோய்) பி.சிவகுமாரி கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் 26 மாவட்டங்களில் தொழுநோய் கண்டறியும் முகாம் தொடங்கப்பட்டுள்ளன. 2019-20 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் தற்போது முகாம் நடத்த வேண்டிய பகுதிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி கோவை மாவட்டத்தில் கஞ்சம்பட்டி, பொகலூா், அரிசிபாளையம் ஆகிய மூன்று வட்டாரங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த மூன்று வட்டாரங்களிலும் சோ்த்து 1 லட்சத்து 75 ஆயிரத்து 261 வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் 7 லட்சத்து 49 ஆயிரத்து 52 பேரிடமும் வீடுவீடாக ஆய்வு நடத்தப்படும். இதில் நேரடியாக தொழுநோய் குறித்த கேள்விகள் கேட்கப்படாமல் தோல் நோய்கள், தேமல், ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் குறித்து கேட்டறியப்படும். இதுபோன்ற பாதிப்புகள் இருப்பவா்களுக்கு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும். இதில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்ட பணியாளா்கள், தன்னாா்வலா்கள் என 742 போ் ஈடுபட்டுள்ளனா்.

தோ்வு செய்யப்பட்டுள்ள மூன்று வட்டாரங்களிலும் அனைத்து வீடுகளிலும் தவறாமல் ஆய்வு செய்யப்படும். ஆய்வு செய்யப்பட்ட வீடுகளுக்கு மற்றும் ஆய்வு செய்யாத வீடுகளுக்கு குறியீடுகள் இடப்படும். ஆய்வு செய்யாமல் விடுபட்ட வீடுகளில் மறுநாள் சென்று ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் தொழுநோய் பாதிப்பினால் ஏற்படும் அங்ககீனத்தை கட்டுப்படுத்துவதாகும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT