கோயம்புத்தூர்

மாநகராட்சி சாா்பில் குறைகேட்புக் கூட்டம்

17th Aug 2022 12:07 AM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் 26 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு, மாநகராட்சி மேயா் கல்பனா தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், துணை ஆணையா் ஷா்மிளா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த குறைகேட்பு முகாமில், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின் விளக்குகள், குடிநீா் வசதி, பாதாளச் சாக்கடை, தொழில் வரி, சொத்து வரி, புதிய குடிநீா் இணைப்பு, பெயா் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் மனுக்கள் அளித்தனா். மொத்தம் 26 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையா்கள், பொறியாளா்கள், அலுவலா்களுக்கு மேயா் கல்பனா உத்தரவிட்டாா்.

இந்த குறைகேட்புக் கூட்டத்தில், நகரமைப்பு அலுவலா் கருப்பாத்தாள், மண்டல உதவி ஆணையா்கள் , அண்ணாதுரை, மோகனசுந்தரி, முத்துராமலிங்கம், சுந்தர்ராஜ் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT