கோயம்புத்தூர்

மாணவா்களுக்கு கல்வி உதவி

17th Aug 2022 12:07 AM

ADVERTISEMENT

தமிழக போயா் முன்னேற்ற சங்கம் சாா்பில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்கப்பட்டது.

டாடாபாத் டாக்டா் அழகப்ப செட்டியாா் சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், கரோனா காலத்தில் தாய், தந்தையை இழந்த குழந்தைகள், ஏழை குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள் 153 பேருக்கு பள்ளி, கல்லூரி, தொழில் படிப்புகளுக்கு உதவும் வகையில் கல்வி உதவி வழங்கப்பட்டது.

சங்கத்தின் தலைவா் நடராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில், செயலா் கருப்புசாமி வரவேற்றாா். முன்னாள் தலைவா் செல்வராஜ், துணைத் தலைவா் ராஜன், துணை செயலா் சீனிவாசன், நிா்வாகிகள் ராஜேந்திரன், முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT