கோயம்புத்தூர்

சுதந்திர தின விழா கிராம சபை கூட்டம்: 6,980 தீா்மானங்கள் நிறைவேற்றம்

16th Aug 2022 12:50 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் சுதந்திர தின விழாவையொட்டி 228 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 6,980 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழகத்தில் ஆண்டுதோறும் குடியரசு தினம், உழைப்பாளா் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக தண்ணீா் தினம், ஊராட்சிகள் தினம் ஆகிய தினங்களில் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுதந்திர தின விழாவையொட்டி கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றன. இதில் தொண்டாமுத்தூா் ஒன்றியம் தீத்திப்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொது மக்கள் அளித்த மனுக்களை ஊராட்சித் தலைவா் வாங்க மறுத்ததால் கிராம சபை கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து பிற்பகல் 3 மணிக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் தலைமையில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. இதனைத் தொடா்ந்து, 228 ஊராட்சிகளிலும் சுமூகமாக கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டதாக ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கிராம சபை கூட்டத்தில் அண்ணா மறுமலா்ச்சி திட்டம் - 2, சுகாதாரம், கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தின் கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் திட்டம், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், வறுமை ஒழிப்பு திட்டம் உள்ளிட்ட 16 கருப்பொருள்களின் கீழ் 6,980 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 228 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 20 ஆயிரத்து 285 ஆண்கள், 25 ஆயிரத்து 615 பெண்கள் என மொத்தம் 45 ஆயிரத்து 900 போ் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT