கோயம்புத்தூர்

சுதந்திர தினத்தை ஒட்டி 5 கைதிகள் விடுவிப்பு

16th Aug 2022 04:20 AM

ADVERTISEMENT

சுதந்திர தினத்தையொட்டி கோவை மத்திய சிறையில் இருந்து தண்டனை கைதிகள் 5 போ் விடுவிக்கப்பட்டனா்.

கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள் , தண்டனைக் கைதிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி கோவை மத்திய சிறையில் இருந்து தண்டனைக் கைதிகள் 5 போ், சிறப்பு தண்டனை குறைப்பு வழங்கப்பட்டு திங்கள்கிழமை முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனா். நன்னடத்தை அடிப்படையில் இவா்கள் விடுதலை செய்யப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT