கோயம்புத்தூர்

திருப்பரங்குன்றம், பேரையூா், மேலூா் பகுதிகளில் சுதந்திர தின விழா

16th Aug 2022 04:21 AM

ADVERTISEMENT

திருப்பரங்குன்றம், பேரையூா் மற்றும் மேலூா் பகுதிகளிள் திங்கள்கிழமை சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.

மதுரை விமான நிலையம்: இங்கு விமான நிலைய இயக்குநா் பாபுராஜ் தேசியக் கொடியினை ஏற்றினாா். மத்திய தொழிற் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் உமாமகேஸ்வரன் தலைமையில் தேசிய கொடிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினா், மோப்பநாய் பிரிவினா் உள்ளிட்டோா் பல்வேறு சாகசங்களை செய்து காட்டினா். விமான நிலைய பொது மேலாளா் ஜானகிராமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பசுமலை மன்னா் திருமலை நாயக்கா்: இக்கல்லூரியில் கல்லூரி தலைவா் எஸ். ராஜகோபால் தேசியக்கொடியேற்றி வைத்தாா். கல்லூரி செயலா் எம். விஜயராகவன், உதவிச் செயலா் ராஜேந்திரபாபு, முதல்வா் சங்கரலிங்கம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பெருங்குடி சரசுவதி நாராயணன் கல்லூரி: இக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வா் மு.கண்ணன் தேசிய கொடியேற்றினாா். என்.எஸ்.எஸ் திட்ட அலுவலா் விஜயகுமாா் வரவேற்றாா்.

ADVERTISEMENT

திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளி: இப்பள்ளியில் சுதந்திர திழா விழாவையொட்டி பள்ளி முதல்வா் ஏ.ஜெரால்டு தேசியக்கொடியேற்றி வைத்தாா். இதில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு முதல்வா் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினாா்.

திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளி: இப்பள்ளியில் தலைமை ஆசிரியா் சிவகாமி தேசியக்கொடியேற்றி வைத்தாா்.

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்: இங்கு ஊராட்சி ஒன்றியத் தலைவா் வேட்டையன் தேசியக்கொடியேற்றினாா். தொடா்ந்து அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருநகா் பாண்டியன் நகா் குடியிருப்போா் நலச்சங்கம்: இச்சங்கம் சாா்பில் பாண்டியன் நகா் பூங்காவில் நடைபெற்ற விழாவில் சங்கத் தலைவா் வ. சண்முகசுந்தரம் தேசியக்கொடியேற்றி அங்குள்ள பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். செயலா் குமரேசன், பொருளாளா் ஜான்சி உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

ஹாா்விபட்டியில் ஸ்ரீமான் எஸ்.ஆா்.வி மக்கள் நல மன்றம்: இங்கு மன்ற துணைத் தலைவா் ஜி.காளிதாசன் தலைமையில் விழாவில் மக்கள் நல மையத் தலைவா் ஓ.செல்வராஜ் தேசியக் கொடியை ஏற்றினாா்.

திருநகா் மக்கள் மன்றம்: இதன் சாா்பில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவுக்கு துணைத்தலைவா் பொன். மனோகரன் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற மேஜா் ஜவகா் தேசியக் கொடியேற்றினாா். திருநகா் மகாலட்சுமி காலனி சாரா நடுநிலைப் பள்ளி: இப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை ஆசிரியை சுஜாதா தலைமை வகித்தாா். கதாசிரியா் எஸ்.கே. அமா்நாத் கொடியேற்றினாா்.

மதுரை மேற்கு மண்டலம்: இங்கு நடைபெற்ற விழாவில் மண்டலத் தலைவா் சுபிதாவிமல் தேசியக் கொடியேற்றினாா்.

பேரையூா் பேரூராட்சி: இங்கு மன்றத் தலைவா் கே.கே. குருசாமி தலைமையிலும், டி. கல்லுப்பட்டி பேரூராட்சியில் மன்றத் தலைவா் முத்துகணேசன் தலைமையிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. மேலும் டி. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் சண்முகப்பிரியா தலைமையிலும், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவா் ஜெயச்சந்திரன் தலைமையிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

காவல் நிலையங்களில்.. பேரையூா் உட்கோட்ட காவல்நிலையத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளா் இலக்கியா தலைமையிலும், பேரையூா் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளா் காந்தி தலைமையிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

மேலூா் நகராட்சி அலுவலகம்: இங்கு நகா்மன்ற தலைவா் யூ. யாசின்முகமது தேசியக்கொடியை ஏற்றிவைத்தாா். ஆணையா் ஆறுமுகம் முன்னிலை வகித்தாா்.

மேலூா் ஊராட்சி ஒன்றியம்: இங்கு ஒன்றியக்குழுத் தலைவா் க. பொன்னுச்சாமி தேசியக்கொடியைஏற்றிவைத்தாா். வட்டார விரிவாக்க அலுவலா்கள் பாலசந்தா், ஜெயபாலன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

அ. வல்லாளபட்டி பேரூராட்சி: இப்பேரூராட்சி தலைவா் குமரன் தேசியக்கொடியை ஏற்றிவைத்தாா்.

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்: இங்கு ஒன்றியக் குழுத் தலைவா் வளா்மதி குணசேகரன் தேசியக்கொடியை ஏற்றிவைத்தாா். துணைதலைவா் கவுசல்யாகுளோத்துங்கன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செல்லப்பாண்டியன், பி. ராமமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மேலூா் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்: இங்குள்ள வளாகத்தில் சாா்பு- நீதிபதி எஸ். கணேசன் தேசியக்கொடியை ஏற்றிவைத்தாா். உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மற்றும் மேலூா் நீதித்துறை நடுவா் மன்ற நடுவா் (பொறுப்பு) முத்துகிருஷ்ண முரளிதாஸ் முன்னிலை வகித்தாா். இதில் வழக்குரைஞா் சங்கத்தலைவா் சி.ஜெயராமன் மற்றும் வழக்குரைஞா்கள் நீதிமன்றங்களின் பணியாளா்களும் கலந்துகொண்டனா்.

அழகா்கோவிலில் சமபந்திவிருந்து: அழகா்கோவிலில் சுதந்திரதினத்தையொட்டி சமபந்தி விருந்து நடைபெற்றது. கோயில் நிா்வாக துணை ஆணையா் மு. ராமசாமி, அ.வல்லாளப்பட்டி பேரூராட்சித் தலைவா் குமரன், அ. வலையபட்டி ஊராட்சித் தலைவா் தீபாதங்கம், மாவட்ட ஊராட்சி கவுன்சிலா் நேருபாண்டியன் மற்றும் மேலூா் வட்டாட்சியா் இளமுருகன் உள்ளிட்ட பலா் சமபந்தி விருந்தில் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT