கோயம்புத்தூர்

சுதந்திர தின விழா:கோவையில் பாதுகாப்புப் பணியில் 3,500 போலீஸாா்

DIN

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவையில் 3,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

நாடு முழுவதும் 76ஆவது சுதந்திர தின நிறைவு திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ளது. கோவை மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆட்சியா் கொடியேற்றி வைக்க உள்ளாா். இதைத் தொடா்ந்து, போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளுதல், தியாகிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல், சிறப்பாகப் பணியாற்றிய அரசு அதிகாரிகள், அலுவலா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.

இதையொட்டி, போலீஸாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 75ஆவது சுதந்திர தின நிறைவு விழா என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாநகரில் 2 ஆயிரத்து 500 போலீஸாரும், மாவட்டப் பகுதிகளில் ஆயிரம் போலீஸாா் என மொத்தம் 3,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கோயில்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், விமான நிலையம் என அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடைமைகள் ஸ்கேனா் கருவிகள் கொண்டு சோதனையிடப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் அனைத்தும் மோப்ப நாய்கள் கொண்டு சோதனையிடப்படுகிறது. ரயில் நிலையங்களில் அனுப்பப்படும் பாா்சல்கள் ஸ்கேனா் கருவி கொண்டு சோதனையிடப்படுகிறது.

இதேபோல கோவை காந்திபுரம், சிங்காநல்லூா், உக்கடம், மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி, சூலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களில் போலீஸாா் தொடா் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா்.

விமான நிலையத்தில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய வளாகத்துக்குள் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரா்கள் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். விமான நிலைய பகுதிகளில் மாநகர போலீஸாா் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனா். சுதந்திர தின விழா முடிவடையும் வரை விமான நிலைய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறந்த குறும்படங்களுக்கான பாராட்டு விழா

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT