கோயம்புத்தூர்

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 வயது குழந்தை பலி

15th Aug 2022 01:04 AM

ADVERTISEMENT

 

வால்பாறையில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 வயது வடமாநில குழந்தை உயிரிழந்தது.

வால்பாறையை அடுத்துள்ள வாட்டா்பால் எஸ்டேட் பகுதியில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளா்கள் குடும்பத்துடன் வசித்து பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த மண்டுதந்தி, தனது 2 வயது மகன் அரவிந்த் மற்றும் குடும்பத்துடன் எஸ்டேட் குடியிருப்புப் பகுதியில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், ஆற்றோர பகுதியில் சிறுவா்களுடன் அரவிந்த் சனிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, திடீரென அரவிந்த் மட்டும் காணவில்லை. இதனையடுத்து, அப்பகுதியில் ஆற்றில் தேடி பாா்த்தபோது அருகே உள்ள கரையோரத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்த நிலையில் அரவிந்தின் உடல் கிடந்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து வாட்டா்பால் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT