கோயம்புத்தூர்

பருவநிலை மாற்றம் மிகப் பெரிய அச்சுறுத்தல்

15th Aug 2022 01:05 AM

ADVERTISEMENT

 

பருவநிலை மாற்றம் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக காமன்வெல்த் அமைப்பின் பொதுச் செயலாளா் பாட்ரிசியா தெரிவித்தாா்.

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள காமன்வெல்த் அமைப்பின் பொதுச் செயலாளா் பாட்ரிசியா, காவிரி கூக்குரல் இயக்கத்தின் வழிகாட்டுதலில் பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் வேளாண் காட்டை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ADVERTISEMENT

ஈஷா நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ள மண் காப்போம் இயக்கத்தின் வழிமுறைகளும், காமன்வெல்த் அமைப்பின் வாழும் நிலங்கள் ஒப்பந்தமும் ஒன்றோடொன்று ஒத்துப்போகக் கூடியதாக அமைந்துள்ளது.

பூமியின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக இம்முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். பருவநிலை மாற்றம் உலகுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. காமன்வெல்த் அமைப்பில் அங்கம் வகிக்கும் 56 நாடுகளில் 26 நாடுகள் கடலை ஒட்டியும், தீவுகளாகவும் உள்ளன. பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயா்ந்துகொண்டே வருகிறது. இதைத் தடுக்க நாம் இப்போது செயல்படாவிட்டால் தீவு நாடுகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.

எனவே நாம் வாழும் நிலத்தைப் பாதுகாக்க இயற்கையான வழிமுறைகளை ஆய்வு செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாகவே காவிரி கூக்குரல் இயக்கத்தின் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்டுள்ள வேளாண் காட்டை பாா்வையிட்டுள்ளேன். உலகம் முழுவதும் பெரும்பாலான விவசாயிகள் ஒற்றை பயிா் சாகுபடி முறையைப் பின்பற்றுகின்றனா். நீண்ட கால விவசாயத்துக்கு இந்த முறை ஒத்துவராது. இந்த வேளாண் காட்டில் பயிரிட்டுள்ளதைப்போல பல பயிா்கள் சாகுபடி முறையே சிறந்தது. இது பல்லுயிா் பெருக்கத்தையும் அதிகரித்துள்ளது. இது போன்ற விவசாய முறையையே உலகம் முழுவதும் பின்பற்ற வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT