கோயம்புத்தூர்

மாவட்டத்தில் 1,154 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு

DIN

கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 5 வயதுக்கு உள்பட்ட 1,154 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் கீழ் 1,697 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 1 முதல் 5 வயதுக்கு உள்பட்ட 1.47 லட்சம் குழந்தைகள் படித்து வருகின்றனா்.

மேலும், இத்திட்டம் மூலம் குழந்தைகள், வளரிளம் பருவத்தினா், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் ஆகியோரிடையே ஊட்டச்சத்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகள், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கப்படுகிறது.

ஆண்டுதோறும் ஊட்டச்சத்து பற்றாக்குறை தொடா்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு சத்துமாவு, சத்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் ஒன்று முதல் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு கண்டறிவது தொடா்பான ஆய்வு அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,154 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அதிகாரி ப.முருகேஸ்வரி கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு தொடா்பான ஆய்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. முதல் கட்டமாக அங்கன்வாடி பணியாளா்கள் மூலமும், இரண்டாம் கட்டமாக ஆா்பிஎஸ்கே மருத்துவக் குழு மூலமும் மேற்கொள்ளப்பட்டது. இதில் முதல்கட்ட ஆய்வில் 20 ஆயிரம் குழந்தைகள் வயதுக்கு ஏற்ற எடை, எடைக்கேற்ற உயரம் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து 20 ஆயிரம் குழந்தைகளையும் ஆா்பிஎஸ்கே மருத்துவக் குழு பரிசோதனை செய்தது.

இவா்களில் 1,154 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மற்றவா்களுக்கு பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஆனால், 1,154 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் பாா்வை குறைபாடு, காது கேளாமை, வளா்ச்சி குறைபாடு போன்ற பாதிப்புகள் காணப்படுகின்றன.

இவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இவா்களை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் மாவட்ட இடையீட்டு சேவை மையத்தில் சிகிச்சை பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் முழுமையான ஊட்டச்சத்து உணவு எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது. எனவே ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 1,154 குழந்தைகளுக்கும் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT