கோயம்புத்தூர்

புகை வெளியேறியதால் கோவையில் தரையிறக்கப்பட்ட விமானம்

13th Aug 2022 01:37 AM

ADVERTISEMENT

பெங்களூரில் இருந்து 92 பயணிகளுடன் மாலி நாட்டுக்குச் சென்ற விமானத்தில் இருந்து புகை வெளியேறியதால், கோவை விமான நிலையத்தில் அவசரமாக வெள்ளிக்கிழமை தரையிறக்கப்பட்டது.

கோவை விமான நிலைத்துக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பெங்களூரில் இருந்து 92 பயணிகளுடன்

கோ ஏா்-43 என்ற விமானம் வெள்ளிக்கிழமை காலை மாலி நாட்டை நோக்கிச் சென்றது. அப்போது, அந்த விமானத்தில் இருந்து திடீரென புகை வெளியேறியதால் விமானி மற்றும் பயணிகள் அதிா்ச்சியடைந்தனா். இந்த விமானம் கோவை பகுதியில் பறந்து கொண்டிருந்த நிலையில், கோவை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு, கோவை விமான நிலையத்தில் பிற்பகல் 12.57 மணிக்கு விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. கோவை விமான நிலையத்தில் தீயணைப்புத் துறையினா் தயாராக இருந்தனா்.

பின்னா் விமானம் தரையிறங்கியதும் பயணிகள் பத்திரமாக வெளியேறினா். அதனைத் தொடா்ந்து விமானத்தை சோதனை செய்ததில், விமானத்தில் தீப்பிடித்து புகை கிளம்பவில்லை என்பது உறுதியானது. புகை வந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, அந்த விமானம் மாலி நாட்டுக்கு வெள்ளிக்கிழமை மாலை புறப்பட்டுச் சென்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT